என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைது செய்யுங்கள்
நீங்கள் தேடியது "கைது செய்யுங்கள்"
பஞ்சாப் நேஷனல் வங்கி மோடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #PNBFraud #MehulChoksi
புதுடெல்லி:
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் கரீபிய தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவின் குடியுரிமையை பெற்றுள்ளதாக மெகுல் சோக்சி கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம் அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆண்டிகுவா-பர்புடா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. #PNBFraud #MehulChoksi #Tamilnews

×

X